எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டபிள்யுபிஎல் போட்டியில் அசத்தும் ஹர்மன்ப்ரீத் கெளர்!

இந்த வருட டபிள்யுபிஎல் போட்டி, மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருக்கானது.

News image
Updated On :15 மார்ச் 2023, 8:07 am

DIN

டபிள்யுபிஎல் போட்டியில் 5-வது வெற்றியைப் பெற்று பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த நிலையை அடைந்த முதல் அணி என்பதோடு இந்த வருட டபிள்யுபிஎல் போட்டியில் 200 ரன்களுக்கு உட்பட்ட ஸ்கோரைத் தற்காத்துக் கொண்ட முதல் அணியாகவும் உள்ளது. 

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 162/8 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த குஜராத் அணி, 107/9 ரன்கள் எடுத்துத் தோற்றது. 

இந்த வருட டபிள்யுபிஎல் போட்டி, மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருக்கானது. நேற்றைய ஆட்டத்தில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 

டபிள்யுபிஎல் 2023: ஹர்மன்ப்ரீத் கெளர்

- 4 ஆட்டங்களில் 3 அரை சதங்கள்
- 3 சிறந்த வீராங்கனை விருதுகள்
- கேப்டனாக 5 ஆட்டங்களிலும் வெற்றி
 - 65, 11*, 53*, 51 என டபிள்யுபிஎல் போட்டியில் அசத்தல் பேட்டிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.