லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தோஹாவில் மார்ச் 10 அன்று தொடங்கிய இந்தப் போட்டி, மார்ச் 20 அன்று நிறைவுபெறுகிறது. ஆசியன் லயன்ஸ், இந்தியா மஹாராஜாஸ், வேர்ல்டு ஜெயண்ட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்றுள்ளன.
தோஹாவில் நேற்று நடைபெற்ற இந்தியா மஹாராஜாஸ் - வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா, 41 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் ரெய்னாவிடம், லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நீங்கள் விளையாடியதைப் பார்த்த பலருக்கும் நீங்கள் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும் எனத் தோன்றுகிறது எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, நான் சுரேஷ் ரெய்னா, சாஹித் அஃப்ரிடி அல்ல. நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று சொல்லி சிரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


