இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

எங்கிருந்து இவ்வளவு பவர் வந்தது : ஜெய்ஸ்வாலிடம் கேள்வி கேட்ட ரோஹித்! 

நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் ரோஹித் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :1 மே 2023, 9:55 am

DIN

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் 1000-ஆவது ஆட்டமாகும்.

இதில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சோ்க்க, மும்பை 19.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து வென்றது. 

Story image

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் கூறியதாவது: 

கடந்த வருஷம் ஜெய்ஸ்வால் விளையாடியதை பார்த்துள்ளேன். இந்த வருஷம் ஆட்டத்தை வேற லெவலில் எடுத்து சென்றுள்ளார். நான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் எங்கிருந்து இந்தளவுக்கு சக்தி (பவர்) வந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘அதிகமாக ஜிம்மில் நேரம் செலவிடுகிறேன்’ எனக் கூறினார். பந்தினை நன்றாக அடிக்கிறார். இது அவருக்கும் நல்லது. ராஜஸ்தான் அணி மற்றும் இந்திய அணிக்கும் நல்லது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.