விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

எனக்கு ரொனால்டோவை மிகவும் பிடிக்கும்; அதனால்தான்...: பதிரனாவின் அசத்தல் பேட்டி 

சிஎஸ்கேவின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவின் பேட்டி வைரலாகி வருகிறது. 

News image
Updated On :7 மே 2023, 9:34 am

DIN

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரரான மதீஷா பதிரனா தனது அபாரமான பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரர்களும் விக்கெட் எடுத்தப் பிறகு அதை பல விதங்களில் கொண்டாடுவார்கள். மதீஷா பதிரனா ஒவ்வொரு விக்கெட்டின் போதும் கண்களை மூடிக்கொண்டு கைகளை நெஞ்சிக்கு அருகில் வைத்து கொண்டாடுவார். இது அண்டர்டேகர் செலபிரேஷன் என சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

Story image

தற்போது பதிரானா இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே வெய்ன் பர்னேல், முஹமது சிராஜ் என பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் கொண்டாட்டத்தை நகல் எடுத்து செய்வதை பார்க்க முடிந்தது. 

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு மதீஷா பதிரனா கூறியதாவது: 

கடந்தாண்டு மாற்று வீரராக சிஎஸ்கேவில் இணைந்தேன். 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். தற்போது அதிகமகா விளையாட்ய்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே நிர்வாகம் எனக்கு நம்பிக்கையளித்துள்ளது. இதுதான் எனது சிறந்த டி20 போட்டி. எனது ஆட்டத்திற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  நான் ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகன். எனது கொண்டாட்டம் அவரைப் பார்த்து கற்றுக் கொண்டதுதான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.