8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வான ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.  
8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வான ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்து 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மில்லர் சதமடித்து அசத்தினார். 

அடுத்து ஆடிய ஆஸி. அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். 6.1 ஓவரில் 60 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தனர். வார்னர் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க பொறுப்பாக ஆடிய  டிராவிஸ் ஹெட் அதிரடியாக 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் டக்கவுடாக லபுஷேன்- ஸ்மித் ஜோடி சிறிது பார்னர்ஷிப்பை அமைத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி பல கேட்ச்சுகளை தவற விட்டனர். 

பெரிதும் எதிர்பார்த்த மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு அவுட்டானார். இறுதியில்  47.2 ஓவர்களுக்கு 215/7 ரன்கள் எடுத்து ஆஸி. அணி வெற்றி பெற்றது. ஸ்டார்க் 16 ரன்களுடனும் பாட் கம்மின்ஸ் 14 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்கள். 

லபுஷே - 18, ஸ்மித் - 30, இங்கிலிஷ் - 28. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் கேட்சே, ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அகமதாபாத்தில் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

8வது முறையாக ஆஸி. அணி உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி சாதனைப் படைத்துள்ளது. 6வது முறையாக கோப்பையை வெல்லுமா என ஆஸி. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com