இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அழுத்தமும் என்னவென்று தெரியும்: ரோஹித் சர்மாவின் நேர்காணல்! 

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவின் நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ளது. 
இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அழுத்தமும் என்னவென்று தெரியும்: ரோஹித் சர்மாவின் நேர்காணல்! 

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவின் நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ளது.  

“சந்தேகமே இல்லாமல் இது மிகப்பெரிய தருணம். எங்களது கிரிக்கெட் வாழ்க்கையிலும் இது மிகப்பெரிய தருணம்.  இந்தத் தருணத்தில் அமைதியாகவும் உணர்ச்சிவயப்படாமலும் இருக்க வேண்டும் ஏனெனில் அபோதுதான் உங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியும். 

நான் 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து வளர்ந்தவன். அதனால் இது என்னைப் பொருத்தவரை பெரிய நிகழ்வு. 

கிரிக்கெட் ஆடுகளத்துக்கு வெளியே என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது எனத் தெரியும். அவர்களின் அழுத்தமும் எதிர்பார்ப்பும் தெரியும். எங்களது திட்டத்தில் நாங்கள் கவனமுடன் இருக்கிறோம். ஓய்வறையில் அமைதியான சூழலை நிறுவியிறுக்கிறோம்.  

ராகுல் திராவிட் அவ்ர்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு வீரர்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக விவரித்துள்ளார். என்னுடையதும் அவருடையதும் வித்தியசமான பேட்டிங் அணுகுமுறை. ஆனால் அவர் எனக்கு தேவையான சுதந்திரத்தினை வழங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது. இந்த முக்கியமான நிகழ்வில் அவர் எங்களுடன் இருப்பது மகிழ்ச்சி“ எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com