கேரள கிரிக்கெட் அணியின் தூதரானார் கீர்த்தி சுரேஷ்!

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தேசிய அணிக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற கேரளத்தை சேர்ந்த வீராங்கனை மின்னு மணியை வாழ்த்திப் பாராட்டினார்.

மேலும், கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் ஆடையை அணிந்து வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com