இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஜியோ சினிமாவில் ஆகாஷ்வானி என்ற தினசரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரசித் கிருஷ்ணா இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள். அவர் மிகச் சிறந்த வீரர். சச்சின் டெண்டுகருக்காகவே நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன் என்றார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மேலும் பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளித்தார் பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று பிரசித் கிருஷ்ணா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.