சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3-வது டி20: ஆஸ்திரேலியா பந்துவீச்சு; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2023, 1:15 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளில்  இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று குவாஹாட்டியில் 3-வது டி20 போட்டி நடைபெறுகிறது. 

இரு அணிகளுக்கும் இடையிலான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஸாம்பா இடம்பெறவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரையில் முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை இழக்காமலிருக்க வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.