ஆசிய விளையாட்டுகள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், 10வது நாளான இன்று ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்னு ராணி கலந்துகொண்டார்.
இவர் முதலி எறிந்தது ஃபவுலாகியது. அதனைத் தொடர்ந்து விளையாடிய அன்னு, 62.92 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை அன்னு பெற்றுத்தந்துள்ளார்.