நட்பே துணை: விராட் கோலியின் பேட்டினால் சதம் விளாசிய ஸ்மித்!     

பிரபல ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டினை கொண்டு விளையாடியுள்ளார் தெரியுமா. இதோ விவரங்கள்.. 
கோப்புப் படங்கள்
கோப்புப் படங்கள்

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட்டில் ஃபேபுலஸ் ஃபோர் (மிகச் சிறந்த் கிரிக்கெட் வீரர்கள்) பட்டியலில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் இருக்கிறார்கள். 

பிரபல ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் இந்திய வீரர் விராட் கோலியும் நண்பர்கள் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றினை இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

கிரிக்கெட் தொடர்பான விவாதம் ஒன்றில், “2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியான ஓவல் மைதானத்தில் நடந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்திடம் விராட் கோலி பெயர் பதிந்த பேட்டினை பார்த்தேன்.  அப்போது ஸ்மித் என்னிடம் அடிக்கடி விராட் கோலியின் பேட்டில்தான் விளையாடுவேன் எனக் கூறினார். மேலும் ஆஷஸ் போட்டிக்காக விராட் கோலி இன்னொரு பேட்டினை அனுப்புவாரென காத்திருப்பதாகவும் கூறினார். அதுதான் இருவருக்குமான நட்பின் பிணைப்பையும் மரியாதையையும் காட்டுகிறது”  என தினேஷ் கார்த்திக் கூறினார்.    

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விராட் கோலி பேட்டினால் ஸ்மித் சதம் விளாசியதும் குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக நடந்த  ஒருநாள் தொடரிலும் ஸ்மித் வெயிலுக்கு தாங்க முடியாமல் மைதானத்தில் சேரில் அமர்ந்து இருக்கும்போது விராட் கோலி லபுஷேனிடம் நடனம் ஆடியதை ஸ்மித் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.    

ஸ்மித் கிரிக்கெட்டில் 2018இல் ஓராண்டு தடைக்குப் பிறகு மோசமான கிண்டல்களுக்கு உள்ளானார். 2019 உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியில் விளையாட வந்தபோது ரசிகர்கள் சிலர் அவரை கிண்டல் செய்யவும் விராட் கோலி ரசிகர்களை நோக்கி, “இது என்ன பழக்கம்; அவரை உற்சாகப்படுத்துங்கள்” எனக் கூறினார். அப்போதிலிருந்தே இருவருக்குமான நட்பு தொடர்கிறது.  

இந்த உலகக் கோப்பையில் இருவரும் அந்தந்த  அணிக்கு முக்கியமான பங்களிப்பினை அளிப்பார்களென கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து கூறியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com