ஆசியப் போட்டி: பந்து வீச்சில் அசத்தும் இந்தியா தங்கம் வெல்லுமா? 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்து வருகிறது. 
ஆசியப் போட்டி: பந்து வீச்சில் அசத்தும் இந்தியா தங்கம் வெல்லுமா? 

டி20 முறையில் நடைபெற்ற ஆசியப் போட்டி கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 

ஆடவா் கிரிக்கெட் இறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்துடன் மோதுகிறது இந்திய அணி. தற்போது இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்து வருகிறது. 

அசத்தலாக பௌலிங் செய்துவரும் இந்திய அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  10 ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 50/4 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பிஷ்னோய் தலா 1 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய்- ஜிதேஷ் ஷர்மா இணைந்தி 1 ரன் அவுட்டினையும் செய்துள்ளார்கள். 

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெற்று வரும் 18-ஆவது ஆசியப் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே மகளிர் கிர்க்கெட் அணி தங்கம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வெல்லுமென ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை கவனித்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com