உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் 428 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த வரலாற்றுச் சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இமாலய இலக்கை குவித்ததன் மூலம் தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ள மேலும் சில சாதனைகளை பின்வருமாறு காணலாம்.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணிகள் (ஒருநாள்)

428/5 - தென்னாப்பிரிக்கா - இலங்கைக்கு எதிராக, 2023
417/6 - ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2015
413/5 - இந்தியா - பெர்முடாவுக்கு எதிராக, 2007
411/4 - தென்னாப்பிரிக்கா - அயர்லாந்துக்கு எதிராக, 2015
408/5 - தென்னாப்பிரிக்கா - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2015 

உலகக் கோப்பையில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் (ஒருநாள்)

தென்னாப்பிரிக்கா - 3 முறை
இந்தியா - 1 முறை
ஆஸ்திரேலியா - 1 முறை

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள்

தென்னாப்பிரிக்கா - 8 முறை
இந்தியா - 6 முறை
இங்கிலாந்து - 5 முறை
ஆஸ்திரேலியா - 2 முறை
இலங்கை - 2 முறை

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச ரன்கள்

439/2 - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2015
438/9 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2006
438/4 - இந்தியாவுக்கு எதிராக, 2015
428/5 - இலங்கைக்கு எதிராக, 2023

தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக இன்று குவித்துள்ள  428 ரன்கள் ஒருநாள் போட்டிகளில்  ஒரு அணி இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 414 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவின் 428 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் இந்திய மண்ணில் ஒரு அணியால் எடுக்கப்படும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com