மிட்செல் சான்ட்னரின் புதிய சாதனைகள்! 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மிட்செல் சான்ட்னர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 
மிட்செல் சான்ட்னரின் புதிய சாதனைகள்! 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் நியூசிலாந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை திங்கள்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூசிலாந்து 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய நெதா்லாந்து 46.3 ஓவா்களில் 223 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. நியூசிலாந்து தரப்பில் 36 ரன்கள் விளாசியதுடன் 5 விக்கெட்டுகளும் சாய்த்த சான்ட்னர் ஆட்டநாயகன் ஆனாா். 

இதன் மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து சுழல்பந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் சான்ட்னர். 

உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகள் மற்றும் 30+ ரன்கள் அடித்த பட்டியலில் 5வது வீரராக மிட்செல் சான்ட்னர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  1. கபில் தேவ் -1983- 5/43 & 40 ரன்கள் 
  2. ஆண்டி பிசேல் - 2003 - 7/20& 34 ரன்கள் 
  3. யுவராஜ் சிங்- 2011- 5/31& 50 ரன்கள் 
  4. ஷகிப் ஹல் ஹாசன் -2019-  5/29& 51 ரன்கள் 
  5. மிட்செல் சான்ட்னர் -2-23 - 5/59 & 36 ரன்கள்

மேலும் இந்தியாவில் சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலிலும் சான்ட்னர் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தும் சான்ட்னர், “இந்தியாவில் எப்படி பந்து வீசு வேண்டுமென்பதை ஜடேஜாவை பார்த்து கற்றுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.   சிஏச்கேவில் விளையாடிய அனுபவம் சான்ட்னருக்கு மிகவும் உதவியிருக்கிறது என ரசிகர்கள் கருத்து கூறிவருகிறார்கள்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com