உலகக் கோப்பையில் களமிறங்கிய அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்ளே அசத்தியுள்ளார்.
உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தனது வெற்றிக் கணக்கையும் தொடங்கியது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அறிமுக வீரராக களமிறங்கிய ரீஸ் டாப்ளே அபாரமாக பந்துவீசி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
இதையும் படிக்க: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி என்பது மேலும் எளிமையானது. வங்கதேசத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹாசன் (1 ரன்), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (0 ரன்) மற்றும் ஷகிப் அல் ஹசன் (1 ரன்) ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார்.
சிறப்பாக பந்துவீசிய ரீஸ் டாப்ளே 10 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் அசத்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்
ஸ்டீவன் ஃபின் - 5/71 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2015
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 4/25 - நெதர்லாந்துக்கு எதிராக, 2003
ஆலன் முல்லாளி - 4/37 - இலங்கைக்கு எதிராக, 1999
ரீஸ் டாப்ளே - 4/43 - வங்கதேசத்துக்கு எதிராக, 2023
ஜேம்ஸ் டிரெட்வெல் - 4/48 - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2011.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


