மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இன்றைய போட்டியில் ஷுப்மன் கில் இடம்பெற 99% வாய்ப்பு : ரோஹித் சர்மா உறுதி!

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஷுப்மன் கில் இடம்பெற 99 சதவிகிதம்  வாய்ப்புள்ளதாக ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார்.

Published On :


இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் அண்மையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உலகக் கோப்பை தொடங்கும் நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்திய அணி நாளை இன்று (அக்டோபர் 14) பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. 

Story image

டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த ஷுப்மன் கில் குணமடைந்து,  அகமதாபாத் மைதானத்தில் நேற்று  பேட்டிங் பயிற்சி மேற்கொண்டது அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

Story image

நேற்றைய நேரகாணல் போது ரோஹித் சர்மா, “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் இடம்பெற 99 சதவிகிதம் வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார். 

Story image

மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் இப்போதிலிருந்தே திருவிழாபோல் மைதானத்துக்கு முன்பு கூடியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.