இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: அதிக தோல்விகள்: ஜிம்பாப்வே சாதனையை சமன்செய்த இலங்கை!
இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்திய மண்ணில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மேக்ஸ்வெல். இந்திய மண்ணில் இதுவரை அவர் 51 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொல்லார்டு (49 சிக்ஸர்கள்), அஸ்கர் ஆஃப்கன் (48 சிக்ஸர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (48 சிக்ஸர்கள்) உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎம் பெ. சண்முகம் குறித்து அவதூறு கட்டுரை? அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முதல்வர் விஜய் உத்தரவு! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து!

குஷ்பு - சுந்தர் சி மகள் அவந்திகா திருமணம்! பங்கேற்ற பிரபலங்கள் யார், யார்? த்ரிஷா பங்கேற்பு







