உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணிகள் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சாதனையை இலங்கை சமன் செய்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், லக்னெளவில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியா அணியும் திங்கள்கிழமை மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் முதல் வெற்றி இதுவாகும்.
தொடர்ந்து, மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க | மைதானத்தின் மேற்கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட விளம்பரப் பதாகைகள்!
இதன்மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 42 முறை தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 தோல்விகளுடன் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெனிசுலா: சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 235 பேர் பலி; 4,300 பேர் காயம்

புணே இளம் தொழிலதிபர் சாவில் திடீர் திருப்பம்!! கொலைத் திட்டத்தை தீட்டியது யார்?
ஃபிஃபா உலகக் கோப்பை: 36 லட்சம் பேர் பங்கேற்று வரலாற்றுச் சாதனை!

சென்னையில் ஜூன் 26- இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


