என்னை கட்டியணைத்து அழுதது ஆப்கன் சிறுவனல்ல; இந்திய சிறுவன்: முஜீப்! 

இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றிக்காக தன்னை கட்டியணைத்து அழுதது ஆப்கன் சிறுவனல்ல என முஜீப் கூறியுள்ளார். 
படம்: எக்ஸ் | முஜீப்
படம்: எக்ஸ் | முஜீப்

உலகக் கோப்பையில் தில்லியில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில்  69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். இந்த உலகக் கோப்பைத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைக்கும் முதல் வெற்றி இதுவாகும்.

இந்தப் போட்டி முடிந்தப் பிறகு ஒரு சிறுவன் ஓடி வந்து ஆப்கன் வீரர் முஜீப்பை கட்டியணைத்து அழுவான். இந்த விடியோ இணையத்தில் வைரலானது. பலரும் அது ஆப்கன் சிறுவன் என நினைத்திருந்தார்கள் ஆனால் அது இந்திய சிறுவன் என முஜீப் கூறியுள்ளார். 

முஜீப் தனது எக்ஸ் பதிவில், “அது ஆப்கன் சிறுவன் அல்ல; இந்திய சிறுவன். அந்த வெற்றிக்காக மிகவும் மகிழ்கிறேன். தில்லியில் இருந்த அந்தச் சிறுவனை சந்தித்து மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் விளையாட்டு மட்டுமேயல்ல; அது ஒரு உணர்வு. எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்திலும் இதே ஆதரவினை தெரிவியுங்கள். அன்புக்கு நன்றி தில்லி மக்களே” எனக் கூறியுள்ளார். 

பால் பாய் எனப்படும் பவுண்டரிக்கு வரும் பந்துகளை எடுத்து தரும் சிறுவனின் செயல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத வெறுப்புகளை தாண்டி இந்தமாதிரி நிகழ்வுகள் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com