பிறந்தநாளில் சதம் விளாசிய வீரர்கள்!

தனது பிறந்த நாளான இன்று ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தியுள்ளார். 
பிறந்தநாளில்  சதம் விளாசிய வீரர்கள்!
Published on
Updated on
1 min read

தனது பிறந்த நாளான இன்று ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தியுள்ளார். 

உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். 

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தனது 32-வது பிறந்த நாளை இன்று (அக்டோபர் 20) கொண்டாடுகிறார். பிறந்த நாளான இன்று அவர் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

தங்களது பிறந்த நாளில் சதம் விளாசிய வீரர்கள்

 வீரர் ரன்கள் எதிரணி ஆண்டு பிறந்த நாள்
டாம் லாதம் 140* நெதர்லாந்து 2022 30-வது
சச்சின் டெண்டுல்கர் 134 ஆஸ்திரேலியா 1998 25-வது
ராஸ் டெய்லர் 131* பாகிஸ்தான் 2011 27-வது
 சனத் ஜெயசூர்யா 130 வங்கதேசம் 2008 39-வது
 மிட்செல் மார்ஷ் 121 பாகிஸ்தான் 2023 32-வது
வினோத் காம்ப்ளி 100* இங்கிலாந்து 1993 21-வது

பிறந்த நாளில் உலகக் கோப்பையில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் மிட்செல் மார்ஷ் பெற்றார். அவருக்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அவரது பிறந்த நாளில் உலகக் கோப்பையில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com