விராட் கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை: வங்கதேச கேப்டன்

விராட் கோலியின் சதத்தினை தடுக்கும் எண்ணம் எங்களுக்கு  இல்லை என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை: வங்கதேச கேப்டன்


விராட் கோலியின் சதத்தினை தடுக்கும் எண்ணம் எங்களுக்கு  இல்லை என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். 

இந்தப் போட்யில் விராட் கோலி 97 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. அப்போது அந்த ஓவரை வங்கதேச வீரர் நசும் அகமது வீசினார். அப்போது அவர் பந்தை லெக் சைடு திசையில் அகலப் பந்து போன்று வீசினார். ஆனால், அதனை நடுவர் அகலப் பந்து என அறிவிக்கவில்லை. அதன்பின் அடுத்த இரண்டு பந்துகளில்  விராட் கோலி சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் இந்திய அணிக்கு வெற்றியையையும் பெற்றுத்  தந்தார். விராட் கோலி சதம் அடிப்பதை தடுப்பதற்காக நசும் அகமது அகலப் பந்து வீச முயற்சித்தாரா என்ற விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், விராட் கோலியின் சதத்தினை தடுக்கும் எண்ணம் எங்களுக்கு  இல்லை என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் முறையான ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம். விராட் கோலியின் சதத்தை தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் அதுபோன்ற திட்டம் எதுவும்  கிடையாது. எங்களிடம் இருந்ததெல்லாம் சாதரண திட்டம்தான். எந்த ஒரு பந்துவீச்சாளரும் அகலப் பந்து வீச வேண்டும் என பந்துவீசுவது கிடையாது. நாங்கள் முறையான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்புகிறோம். நாங்கள் எதையும் வேண்டுமென்று செய்யவில்லை  என்றார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com