தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாண்ட்னரின் சிஎஸ்கே அனுபவம் எங்கள் வெற்றிக்கு உதவும்: நியூசிலாந்து கேப்டன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 அக்டோபர் 2023, 2:25 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் இதுவரை நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் நியூசிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி நாளை (அக்டோபர் 22) தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியை  எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பல ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை மிட்செல் சாண்ட்னர் வழங்கி வருகிறார். இந்திய ஆடுகளங்களில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவருக்கு இந்திய ஆடுகளங்களின்  தன்மை குறித்து அனுபவம் இருக்கும். அவர் சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். அதனால் இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப அவர் தன்னை எளிதில் மாற்றிக் கொள்வார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளார். நாளைய போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.  

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னர் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.