மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி  உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) காலமானார்.

News image
Updated On :23 அக்டோபர் 2023, 12:00 pm

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி  உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) காலமானார்.

1946 ஆம் ஆண்டு அமிர்சரஸில் பிறந்த பிஷன்  சிங் பேடி இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 14 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு பத்து விக்கெட்டுகள் அடங்கும். அதேபோல இந்திய அணிக்காக 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கடந்த 1970-ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியது. 

தனது மனைவி அஞ்சு மற்றும் மகன் அங்காத், மகள் நேஹாவுடன் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.