
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் ஓடியாடி உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடியோவினை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த்துக்கு கார் விபத்து ஏற்பட்டது. இதனால், அவர் ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற தொடர்களில் எதுவும் கலந்து கொள்ளவில்லை. அவர் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். இந்த நிலையில், ரிஷப் பந்த் ஓடியாடி உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடியோவினை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க: நீரஜ் சோப்ராவை பாராட்டிய ஸ்விட்சர்லாந்து சுற்றுலாத் துறை!
விடியோவை வெளியிட்டு எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: கடவுளுக்கு நன்றி. இருட்டில் இருந்து என்னால் தற்போது வெளிச்சத்தை பார்க்க முடிகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்து வரும் ரிஷப் பந்த் பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். விரைவில் அவர் முழுவதுமாக குணமடைந்து இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.