ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

34 வயதாகும் விராட் கோலி 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,900க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். இதில் 46 சதங்கள், 66 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.

சச்சினுக்குப் பிறகு அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி இருக்கிறார். எப்போதும் இளம் வீரர்களுடன் உரையாடல் நிகழ்த்துவதில் ஆர்வமுடையவர். 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் அரைசதமடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 112முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங் சாதனை சமன்செய்துள்ளார் விராட் கோலி. சச்சின் 145 முறை 50+ ரன்களை எடுத்து உலக அளவில் மிதலிடத்தில் இருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் அதிகம் முறை 50+ அடித்தவர்கள்: 

சச்சின் டெண்டுல்கர்- 145 
குமார் சங்ககாரா- 118 
விராட் கோலி- 112 
ரிக்கி பாண்டிங்- 112 
ஜாக் காலிஸ்- 103 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com