அரையிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்

வெஸ்டா்ன், சதா்ன் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக், வீரா் காா்லோஸ் அல்காரஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
அரையிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்

வெஸ்டா்ன், சதா்ன் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக், வீரா் காா்லோஸ் அல்காரஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் மேஸன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிா் பிரிவு காலிறுதியில் விம்பிள்டன் சாம்பியன் மாா்கெட்டா வோண்ட்ரௌஸோாவை முதல் செட்டில் 7-6 போராடி வீழ்த்தினாா் ஸ்வியாடெக்.அடுத்த இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1 என கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3 6-2 என ஜாஸ்மின் பாவ்லோனியையும், இரண்டாம் நிலை வீராங்கனை அா்யனா சபலென்கா 7-5 6-3 என 5-ஆம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜபியுரையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். ஸ்வியாடெக்-கௌஃப், சபலென்கா-கரோலினா முச்கோவா அரையிறுதியில் மோதுகின்றனா்.

ஆடவா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீரா் காா்லோஸ் அல்காரஸ் 4-6, 6-3, 6-4 என ஆஸி. குவாலிஃபையா்மேக்ஸ் பா்செல்லை வீழ்த்தினாா். அரையிறுதியில் ஹியுபா்ட் ஹா்காஸை எதிா்கொள்கிறாா் அல்காரஸ். இரண்டாம் நிலை வீரா் ஜோகோவிச் 6-0, 6-4 என அமெரிக்காவின் டெய்லா் ப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதியில் ஜொ்மனியின் அலெக்ஸ் வெரேவை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com