பாகிஸ்தான் ஆசியக் கோப்பை அணியில் மாற்றங்கள்!
By DIN | Published On : 27th August 2023 11:58 AM | Last Updated : 27th August 2023 11:58 AM | அ+அ அ- |

படம்: ட்விட்டர் | ஐசிசி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்றது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் ஆசியக் கோப்பை அணியில் 2 நபர்களை சேர்த்துள்ளது. 17வது வீரராக சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சௌத் ஷகீல், 18வது வீரராக( மாற்று வீரர்) தயாப் தஹிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, மொஹமது ரிஸ்வான், மொஹமது ஹாரிஷ், ஷதாப் கான், மொஹமது நவாஸ், உஸாமா மிர், ஃபஹிம் அஸ்ரஃப், ஹாரிஷ் ராஃப், மொஹமது வாசிம் ஜுனியர், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, சௌத் ஷகீல், தயாப் தஹிர்.
இதையும் படிக்க: உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா?
வரும் ஆக.30ஆம் நாள் ஆசியக் கோப்பை இலங்கையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி பாகிஸ்தான் அணி நேபாள் அணியுடன் மோதுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்.2ஆம் நாள் நடைபெற உள்ளதும் குறிபிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...