மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்தான் இங்கிலாந்தின் பேஸ்பாலுக்கு உண்மையான சவால்: மெக்குல்லம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இங்கிலாந்தின் உண்மையான பேஸ்பால் சவால் இருப்பதாக அதன் அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியுள்ளார். 

கோப்புப் படம்

Published On :

டெஸ்டில் தொடர் தோல்வியிலிருந்ததால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் 2022இல் விலகினார். மெக்குல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஆனார். 

மெக்குல்லம் - பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பேஸ்பால் என பெயர் வைத்துள்ளனர். 

அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. 

2024ஆம் ஆண்டு ஜனவரி 25இல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இது குறித்து பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியதாவது: 

இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் புகழப்படுவோம் இல்லையெனில் இகழப்படுவோம்.

எங்களது பேஸ்பால் அணுகுமுறையால் உடனடி பலன் கிடைத்துண்டு. ஆனால் இது எங்களுக்கு இன்னும் முழுமையானதாக அமையவில்லை. சில வீரர்கள் 18 மாதங்களாக அவர்களது முழுத்திறனை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். தலைவரின் வேலை இதை சரி செய்வதுதான் எனக் கூறினார். 

மெக்குல்லம் ஐபிஎல்லில் 73 பந்துகளில் 158 ரன்கள் அதிரடியாக அடித்து நொறுக்கினார். அதனால் பேஸ்பால் என்ற பட்டப்பெயர் இங்கிலாந்துக்கும் வந்தது. இவரது இந்த அணுகுமுறை இங்கிலாந்து கிரிக்கெட்டினையே மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.