தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கின்போது மூன்றாவது ஓவரில் ரீஸா ஹென்ரிக்ஸ் அடித்த பந்தை தடுக்க முயன்ற சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.
இதையும் படிக்க: பிறந்தநாளில் அசத்திய குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் மருத்துவரோடு அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின், 11 ஓவர்களுக்கு அவர் ஃபீல்டிங் செய்யவில்லை.
காயம் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: நான் நன்றாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. நடக்க முடியாத அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. அணியின் வெற்றிக்கானப் போட்டியில் சதமடிப்பது என்பது மிகவும் அற்புதமானது. நாங்கள் அச்சமின்றி விளையாடும் விதத்தை வெளிப்படுத்தினோம். 3 விக்கெட்டுகள், 4 விக்கெட்டுகள் எடுப்பதில் குல்தீப் யாதவ் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். அவருக்கு அவரே சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுத்துக் கொண்டார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



