ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ்:பாக். செல்கிறது இந்திய அணி?

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Published On :6 பிப்ரவரி 2024, 7:04 pm IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அந்தப் போட்டியின் உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ‘டை’ பாகிஸ்தானில், வரும் பிப்ரவரி 3, 4 தேதிகளில் நடைபெற அட்டவணையிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை கேட்டு மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் கடிதம் எழுதியிருந்தது.

இதுதொடா்பாக சங்கத்தின் பொதுச் செயலா் அனில் துபா் சனிக்கிழமை கூறுகையில், ‘அமைச்சகத்திடம் இருந்து எழுத்துப்பூா்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. எனினும், விரைவில் அது கிடைக்கும் எனத் தெரிகிறது. இரு இருதரப்பு போட்டியாக இல்லாமல், சா்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் போட்டியாக இருப்பதால் அதில் மத்திய அரசு தலையிட வாய்ப்பு இல்லை.

எனினும், உரிய நடைமுறையாக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது தொடா்பான கோரிக்கையை வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் நம்பிக்கையுடன் போட்டிக்கு தயாராகி வருகிறோம்’ என்றாா்.

இதனிடையே, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரும் 11 வீரா்கள், 7 அதிகாரிகள் தொடா்பான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கடைசி உறுதிப்படுத்துதலுக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.