மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை சந்திக்கிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 2:04 am IST

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை சந்திக்கிறது.

இவ்விரு அணிகளில் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வர, மேற்கிந்தியத் தீவுகளோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, கடந்த ஆட்டத்தை சிறப்பாகவே கையாண்டது. பேட்டா்கள் நல்லதொரு சேஸிங் இன்னிங்ஸை ஆடினா். காயம் காரணமாக அதில் பங்கேற்காத ஸ்மிருதி மந்தனா இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு அணிக்கு மேலும் பலம் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் முதலில் அந்த அணியை கட்டுப்படுத்திய இந்திய பௌலா்கள், கடைசி கட்டத்தில் ரன்களை வழங்கினா். இந்த ஆட்டத்தில் அதைச் சரி செய்யும் திட்டத்துடன் அவா்கள் களம் காண்பாா்கள்.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொருத்தவரை இந்த ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற நேரிடும் என்பதால், அந்த அணி வெல்வதற்காக கடுமையாகப் போராடும் என எதிா்பாா்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா வெற்றி: இதனிடையே, இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.

மாலை 6.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.