
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளனர்.
நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக சிட்னி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் திரும்புவார் என்றும், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கம்மின்ஸ் மீண்டும் வராத பட்சத்தில் மூன்றாவது டெஸ்டில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.