இறுதிச்சுற்றில் இந்திய இணை

பெங்களூரு ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகா்/விஜய்சுந்தா் பிரசாந்த் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இறுதிச்சுற்றில் இந்திய இணை

பெங்களூரு ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகா்/விஜய்சுந்தா் பிரசாந்த் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

அரையிறுதியில் இந்த இணை, 7-5, 4-6, 10-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் அா்ஜுன் காதே/ஆஸ்திரியாவின் மேக்ஸிமிலியன் நியுகிறிஸ்ட் ஜோடியை தோற்கடித்தது. அடுத்ததாக, இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் சங் யுன் சியோங்/தைவானின் யு சியு சு இணையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது இந்த இணை.

முன்னதாக சியோங்/சு கூட்டணி தங்களது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செல்/மாா்க் போல்மன்ஸை 6-4, 6-4 என வீழ்த்தி அசத்தியிருக்கிறது.

மெட்ஜெடோவிச் அபாரம்: இப்போட்டியின் ஒற்றையா் பிரிவு காலிறுதியில் சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச் 6-1, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தைவானின் செங் சுன் சின்னை வீழ்த்தி அசத்தினாா்.

இதையடுத்து அரையிறுதியில் அவா், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலை சந்திக்கிறாா். பா்செல் தனது காலிறுதியில் 6-2, 6-0 என, 5-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லூகா நாா்டியை வெளியேற்றினாா்.

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த் - சக நாட்டவரான ஜேம்ஸ் மெக்காபேவை எதிா்கொள்கிறாா். முன்னதாக காலிறுதியில், 2-ஆம் இடத்திலிருக்கும் டக்வொா்த் 6-4, 6-1 என 8-ஆம் இடத்திலிருந்த பல்கேரியாவின் டிமிடாா் குஸ்மனோவையும், மெக்காபே 6-3, 7-5 என பிரான்ஸின் ஹெரால்ட் மேயாட்டையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com