முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்து உனாட்கட் சாதனை!

முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்து உனாட்கட் சாதனை!

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெயதேவ் உனாட்கட்.


ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெயதேவ் உனாட்கட்.

ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தில்லி - செளராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்து ஆச்சர்யப்படுத்தினார் செளராஷ்டிர அணி கேப்டனான உனாட்கட். மூன்றாவது பந்தில் துருவ் ஷோரேவை போல்ட் செய்தார். அடுத்த இரு பந்துகளில் வைபவ், யாஷ் துல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற சாதனையைப் படைத்தார். தனது 2-வது ஓவரில் ஆயுஷ் பதோனி, ஜான்டி சித்து ஆகியோரின் விக்கெட்டுகளையும் எடுத்து 5 விக்கெட்டுகளை 2 ஓவர்களுக்குள் எடுத்து அசத்தினார். தில்லி அணியின் முதல் 5 பேட்டர்களில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 

தில்லி அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. உனாட்கட் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2022 இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் உனாட்கட் விளையாடினார். 31 வயது உனாட்கட், 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்தார். இந்திய அணிக்காக 2 டெஸ்ட்கள், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com