முதல் இன்னிங்ஸில் ஆஸி-317 ரன்களும் இங்கிலாந்து - 592 ரன்களும் எடுத்துள்ளது. ஆஸி. அணி 2ஆம் இன்னிங்ஸில் 113/4 ரன்கள் எடுத்துள்ளது.
லபுஷேன் 44 ரன்களும் மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடம் களத்தில் இருக்கிறார்கள். மீதமிருக்கும் இரண்டு நாள்களில் ஆஸி. அணி விக்கெட் விடாமல் இருந்தால் மட்டுமே ஆட்டத்தினை டிரா செய்ய முடியும். வெல்ல வேண்டுமானால் அதிரடியான் ஆட்டத்தினை விளையாட வேண்டும். அடுத்து இங்கிலாந்தையும் ஆல் அவுட் செய்ய வேண்டும். இது மிகவும் கடினாமான ஒன்றாகும். எனவே மழை குறுக்கிட்டால் ஆஸி. அணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆஸி.2-1 என முன்னிலையில் இருக்கிறது.
பிரபல ஆஸி. வேகப் பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் மழை வர வேண்டி பிரார்த்தனை செய்தால் மகிழ்ச்சி என பேட்டியில் கூறியிருந்தார். அவர் வேண்டுதல் வீண் போகவில்லை. பலித்துவிட்டது. இங்கிலாந்தில் மழை.
The update nobody wantedâ¦
â England Cricket (@englandcricket) July 22, 2023
Weâre going to be heavily delayed at Old Trafford as the rain is still falling in Manchester #EnglandCricket | #Ashes pic.twitter.com/LIwEfSIQy3
மழை இன்னும் நிற்கவில்லை. போட்டி துவங்க தாமதமாகுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் மகிழ்ச்சி: ஹேஸில்வுட்
ஆஸி. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதே சமயம் இங்கிலாந்து வீரர்கள் சோகத்திலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவிவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்

இது தெரியுமா? அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவரின் உடை, நோயாளியின் அங்கி பச்சை நிறத்தில் இருப்பது ஏன்?







