ஆஷஸ் உணவு இடைவேளை: வலுவான நிலையில் ஆஸி.!
By DIN | Published On : 31st July 2023 06:28 PM | Last Updated : 31st July 2023 06:34 PM | அ+அ அ- |

கடைசி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆஸி. அணி 295 ரன்களுக்கு ஆட்டமிழக்க இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டினை விளையாடி 395 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸி. அணிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 2-1 என ஆஸி. அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 55 பந்துகளில் 137 ரன்கள்: நிகோலஸ் பூரணின் 13 சிக்ஸர்கள்! வைரல் விடியோ!
தற்போது ஆஸி. அணி உணவு இடைவேளை வரை விளையாடி 238/3 ரன்கள் எடுத்துள்ளது. நிதானமான தொடக்கத்தை தந்த வார்னர் 60 ரன்களுக்கும் கவாஜா 72 ரன்களுக்கும் கிறிஸ் ஓக்ஸ் பௌலிங்கில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லபுஷேன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித் - டிராவிஸ் ஹெட் அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: 3 ஜோடிகளின் காதல் கதை: இறுகப்பற்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
ஸ்மித் 40 ரன்களும் ஹெட் 31 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்னும் 146 ரன்கள் எடுத்தால் ஆஸி. அணி வெற்று பெரும். வலுவான நிலையில் இருப்பதால் 3-1 என இந்த ஆஷஸ் தொடரை ஆஸி. அணி வெல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...