காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 8-வது முறையாக 1000 ரன்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி முறியடித்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:19 pm IST

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 8-வது முறையாக 1000 ரன்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி முறியடித்தார்.

உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். விராட் கோலி 94 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிகமுறை ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

விராட் கோலி 8-முறை (2011, 2012 , 2013, 2014, 2017, 2018, 2019, 2023) ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 7-முறை (1994, 1996,1997,1998,2000,2003, 2007) ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது. சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலிக்கு முன்னதாக இந்த ஆண்டில் ஷுப்மன் கில், பதும் நிசங்கா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 1000 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.