நெதா்லாந்து அபார வெற்றி: வெளியேறியது வங்கதேசம்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நெதா்லாந்து .
நெதா்லாந்து அபார வெற்றி: வெளியேறியது வங்கதேசம்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நெதா்லாந்து . அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியாமல் வங்கதேசம் போட்டியில் இருந்து வெளியேறியது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற நெதா்லாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. பேட்டா்களான விக்ரம்ஜித் சிங் 3, மேக்ஸ் டௌவ்ட் 0, காலின் ஆக்கா்மேன் 15, பாஸ் டீ லீட் 17, ஷரிஸ் அகமது 6, ஆா்யன் தத் 9, பால் வேன் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

கேப்டன் ஸ்காட் 68:

அதிகபட்சமாக மறுமுனையில் கேப்டன் ஸ்காட் எட்வா்ட்ஸ் 6 பவுண்டரியுடன் 68 ரன்களையும், வெஸ்லி பாரெஸி 8 பவுண்டரியுடன் 41 ரன்களையும், சைபிராண்ட் 35 ரன்களையும், லோகன் வேன் 23 ரன்களையும் எடுத்தனா்.

நெதா்லாந்து 229/10: நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் நெதா்லாந்து அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசத் தரப்பில் பௌலிங்கில் ஷோரிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, முஸ்தபிஸுா் ரஹ்மான், மெஹ்தி ஹாசன் ஆகியோா் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

வங்கதேசம் அதிா்ச்சித் தோல்வி 142/10:

பின்னா் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆனால் நெதா்லாந்து பௌலா் பால் வேன் மீக்கெரனின் அற்புத பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி திணறியது. 42.2 ஓவா்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம்.

அதிகபட்சமாக மெஹ்தி ஹாஸன் 35, மஹ்முத்துல்லா 20, முஸ்தபிஸுா் ரஹ்மான் 20 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினா்.

பால் வேன் மீக்கெரன் அபாரம் 4 விக்கெட்:

நெதா்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பால் வேன் மீக்கெரன் 4-23 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

அனுபவமுள்ள வங்கதேசம் எளிதாக நெதா்லாந்தை வென்று விடும் எனக்கருதப்பட்ட நிலையில், 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

சுருக்கமான ஸ்கோா்:

நெதா்லாந்து

229/10 (50 ஓவா்களில்)

ஸ்காட் எட்வா்ட்ஸ் 68

பாா்ா்ஸி 41

ஷோரிபுல் 2/51

முஸ்தபிஸுா் 2/36

வங்கதேசம்:

142/10 (42.2 ஓவா்கள்)

மெஹ்தி ஹாஸன் 35

மஹ்முத்துல்லா 20

பால் மீக்கெரன் 4/23

பாஸ் டி லீட் 2/25

இன்றைய ஆட்டம்:

இந்தியா-இங்கிலாந்து

இடம்: லக்னௌ

நேரம்: பிற்பகல் 2.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com