ஸ்டார்க் சாதனையை சமன்செய்த முகமது ஷமி! 

ஸ்டார்க் சாதனையை சமன்செய்த முகமது ஷமி! 

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். 
Published on

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 29-ஆவது ஆட்டத்தில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்திய பௌலிங்கில் முகமது ஷமி 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா 1 என விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 முறை 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் முகமது ஷமி. இதற்குமுன்பாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்தாலும் விளையாடும் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார் ஷமி. 13 இன்னிங்ஸில் 6 முறை 4 விக்கெட்டுகளை அடுத்து அசத்திய ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தச் சாதனையை முன்னிட்டு ஐசிசி நிர்வாகம் ஷமிக்கு புதிய போஸ்டரினை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டார்க், ஷமி இருக்கும் புகைப்படத்துடன் உலகக் கோப்பையில் அதிகம் முறை 4 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com