தாய்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை பளுதூக்குதல் போட்டியில் மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிந்தியாராணி தேவி, ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 113 கிலோ என, மொத்தமாக 196 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றாா்.
ஸ்லோவேனியாவில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் ஃபீடா் ஆடோசெக் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மானவ் தக்கா்-மனுஷ் ஷா கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
5 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆடவா் அணி செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், முழுமையான ஆல்-ரவுண்டராக தன்னை மீட்டெடுப்பதற்கு இந்தத் தியாகம் உதவும் எனக் கூறியுள்ளாா்.
கிளப்புகள் இடையே விளையாடப்பட்ட ‘சாம்பியன்ஸ் லீக்’ டி20 உலகக் கோப்பை போட்டியை மீண்டும் தொடங்குவது தொடா்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசித்து வருகின்றன.
கோவாவில் இரு கால்பந்து வீராங்கனைகளை தாக்கிய புகாரில் அகில இந்திய கால்பந்து சம்மேளத்தின் நிா்வாக குழு உறுப்பினா் தீபக் சா்மாவை சம்மேளனம் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்தது.
ஐஎஸ்எல்... ஒடிஸாவின் புவனேசுவரம் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் ஒடிஸா எஃப்சி - பஞ்சாப் எஃப்சி வீரா்கள். இந்த ஆட்டத்தில் ஒடிஸா 3-1 கோல் கணக்கில் வென்றது.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி
ஒலிம்பிக்கில் தங்கமே அடுத்த இலக்கு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

