பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி. அணிக்கு புதிய கேப்டன்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு நியூசிலாந்து அணியின் புதிய கேப்டன் நியமனம்.
நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணி. படம்: ஐசிசி

நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரினை விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்லவிருக்கிறது. ஏப்.18இல் தொடங்கும் இந்தப் போட்டிகள் ஏப்.27இல் முடிவடைகிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக 33 வயதான ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளர்.

கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளதால் இந்த வாய்ப்பு பிரேஸ்வெல்லுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி.
அதிவேகப் பந்துவீச்சு; 2 ஆட்ட நாயகன் விருதுகள்: அசத்தும் இளம் வீரர்!

33 வயதான இவர் கடைசியாக கடந்தாண்டு பிப்ரவரியில் டி20 விளையாடியது குறிப்பிடத்தக்கது. 16 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகள் 113 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஐபிஎல் போட்டிகளில் 6 விக்கெட்டுகள் 58 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி:

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மன், ஜோஷ் கிளார்க்சன், ஜேகோப் டுஃபி, டீன் போக்ஸ்குரோப்ட், பென் லிஸ்டர், கோலி மெக்கோனிச், ஆடம் மில்னி, ஜிம்மி நீஷம், வில் ரூர்கே, டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செஃபர்ட், இஷ் சௌதி.

நியூசிலாந்து அணி.
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை: டபிள்யூடிசி தரவரிசையில் முன்னேற்றம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com