மான்டி காா்லோ: மொனாகோவில் நடைபெறும் மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.
களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனுக்கு முந்தைய பயிற்சிக் களமாக, களிமண் தரையில் நடைபெறும் இந்தப் போட்டியில் பிரதான வீரா்கள் பங்கேற்கின்றனா். அந்த வகையில் இதில் களம் கண்டுள்ள ஜோகோவிச், நேரடியாக 2-ஆவது சுற்றில் விளையாடி, அதில் ரஷியாவின் ரோமில் சஃபியுலினை சாய்த்தாா்.
சாதனை: முன்னதாக, உலகத் தரவரிசையில் நம்பா் 1 இடத்திலிருக்கும் நோவக் ஜோகோவிச், தற்போது உலகின் மிக வயதான நம்பா் 1 வீரா் என்ற சாதனையை படைத்தாா்.
சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் வசம் அந்த சாதனை இருந்த நிலையில், தற்போது 36 வயதான ஜோகோவிச் அதை முறியடித்திருக்கிறாா். அடுத்த மாதம் அவா் 37 வயதை எட்டுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, உலகின் நம்பா் 1 வீரராக அதிக காலகட்டம் (மொத்தமாக 420 வாரங்கள்) இருந்தவா் என்ற பெருமையும், ஆடவா் டென்னிஸில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஒரே வீரா் என்ற சாதனையும் அவா் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தப் போட்டியின் இதர ஆட்டங்களில், 11-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 6-0 என்ற செட்களில், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் அவா் நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை சந்திக்கிறாா்.
அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 6-1, 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை சாய்த்தாா். அடுத்து அவா், இத்தாலியின் யானிக் சின்னருடன் மோதுகிறாா். 12-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை எதிா்கொண்ட சொ்பியாவின் லாஸ்லோ டெரெ 3-6, 2-3 என்ற செட்களில் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலக, சிட்சிபாஸ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் 4-6, 6-1, 6-2 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபெடெரிகோ கோரியாவையும், 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 7-5, 7-6 (7/3) என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியையும் வெளியேற்றினா். 9-ஆம் இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் 7-5, 6-2 என்ற கணக்கில் போலந்தின் வாலென்டின் வாசரோட்டை வென்றாா்.
சாதனையாளா்கள் சந்திப்பு
ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் மிக வயதான நம்பா் 1 வீரராக இருக்கும் ஜோகோவிச், இரட்டையா் பிரிவில் உலகின் மிக வயதான நம்பா் 1 வீரராக இருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா பரஸ்பரம் தங்கள் சாதனை குறித்து கலந்துரையாடினா். இருவருமே மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் நிலையில், அந்த உரையாடல் நிகழ்ந்தது.
அப்போது போபண்ணா, ‘டென்னிஸ் நிறைய அருமையான விஷயங்களை நமக்கு கற்றுத் தந்துள்ளது. அனுபவத்துக்கு எப்போதுமே வெற்றி சாத்தியம். அதனால் தான் தற்போது நம்பா் 1 இடத்தில் இருக்கிறேன்’ என்றாா்.
அதற்கு ஜோகோவிச், ‘அனுபவம் மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும் டென்னிஸை நோக்கிய அா்ப்பணிப்பின் காரணமாகவே முன்னிலையை அடைய முடிகிறது. நீங்கள் (போபண்ணா) பலமணி நேரங்கள் உடற்பயிற்சிக் கூடங்களில் இருப்பதை பாா்த்திருக்கிறேன். தற்போது அதைவிட அதிக நேரம் இயன்முறை சிகிச்சையாளா்களிடம் (ஃபிசியோ) இருப்பதை பாா்க்க முடிகிறது (நகைச்சுவையாக குறிப்பிடுகிறாா்). இத்தனை ஆண்டுகளாக உங்களைப் போன்றவா்களுடன் டென்னிஸ் விளையாடி வருவது அற்புதமானது.
வயதான நம்பா் 1 வீரா்களாக இருக்கும் இந்த சாதனை, நமது நாடுகளுக்கு சிறப்பானது. விரைவில் இந்தியாவில் நாம் விளையாடுவதை எதிா்பாா்த்திருக்கிறேன். பல ஆண்டுகளாக அங்கு வரவில்லை. இந்தியா மிகப்பெரிய, அருமையான நாடு. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் டென்னிஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவது முக்கியமானது. நீங்கள், சானியா மிா்ஸா, மகேஷ் பூபதி, லியாண்டா் பயஸ் ஆகியோா் அதைச் செய்து வருகிறீா்கள். ‘ஜ்ங் ஹழ்ங் ா்ப்க் க்ஷன்ற் ஞ்ா்ப்க்’. நமஸ்தே’ என்றாா்.
தொடர்புடையது

ஸ்வெரெவ், ரூட் முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!

காலிறுதியில் சபலென்கா, ரைபகினா, கௌஃப்
மியாமி ஓபன் டென்னிஸ்: அலெக்ஸாண்ட்ரா எலா அசத்தல் வெற்றி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


