உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் முக்கியமாக இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!
படம் | ஐசிசி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் முக்கியமாக இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் முக்கியமாக இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!
சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் முக்கியமான வீரராக இருப்பார். ஏனென்றால், அவர் மிகவும் அருமையாக விளையாடுகிறார். அவரால் வெறும் 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட முடியும். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அவர் கண்டிப்பாக அணியில் இடம்பெற வேண்டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளார். யுஸ்வேந்திர சஹால் உண்மையில் சிறப்பாக பந்துவீசுகிறார். அவரும் அணியில் இடம்பெற வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் அணிக்கு மிகவும் முக்கியம் எனக் கூறுவேன்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

தினேஷ் கார்த்திக் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றால் மட்டுமே தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்கலாம். இளம் வீரர்களான ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தெரிவுகளாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் நல்ல ஃபார்மிலும் இருக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஷிவம் துபே இந்திய அணியில் இடம்பெறுவதும், பின்னர் இடம் கிடைக்காமல் இருப்பதுமாக இருந்தது. ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரால் ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக மாற்ற முடியும்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!
ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

வயதாகும்போது உங்களது ஃபார்ம் குறித்து பேசுவதைவிட வயது குறித்தே அதிகம் பேசுவார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறந்த வீரர்கள். அவர்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். டி20 போட்டிகளில் அதிக அளவில் இளம் வீரர்கள் விளையாட வேண்டும். டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகம் விளையாடுவது மூத்த வீரர்கள் மீதான சுமையை குறைக்கும். இந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக அளவிலான இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com