/

Din

ஜூனியா் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியை அடுத்த ஆண்டு குவாஹாட்டில் நடத்துகிறது இந்தியா.

தேசிய மகளிா் ஹாக்கி லீக் போட்டி ராஞ்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டங்களில் ஒடிஸா 4-1 என ஹரியாணாவையும், மகாராஷ்டிரம் 5-1 என மணிப்பூரையும் வென்றன.

அல்பேனியாவில் நடைபெற்ற 10 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான உலக கேடட் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்தியாவின் ஷா்வனிகா (8), ரேப்பிட் பிரிவில் தங்கமும், பிளிட்ஸ் பிரிவில் வெள்ளியும் வென்று அசத்தினாா்.

வங்கதேச மகளிருடனான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்று, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆசிய இளையோா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ் (48 கிலோ), ஆகாஷ் கோா்கா (60 கிலோ), பிரீத் மாலிக் (67 கிலோ) ஆகியோா் அரையிறுதிக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

யுனிஃபை கேப்பிட்டல் 3-ஆவது பாய்மரப் படகுப் போட்டி சென்னை துறைமுகத்தில் புதன்கிழமை (மே 1) தொடங்கி, வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் பௌலா் ஹா்ஷித் ராணா விக்கெட் வீழ்த்தியதை விதிகளை மீறிய வகையில் கொண்டாடியதற்காக ஆட்ட ஊதியம் முழுவதும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு ஆட்டத்திலும் தடை விதிக்கப்பட்டது.

சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கொல்கத்தாவில் புதன்கிழமை (மே 1) தொடங்குகிறது.