ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

யார் சிறந்த கேப்டன்: எம்.எஸ்.தோனியா? ரோஹித் சர்மாவா? ரவி சாஸ்திரி பதில்!

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News image
ரவி சாஸ்திரி
Updated On :1 ஆகஸ்ட் 2024, 4:44 pm

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மகேந்திர சிங் தோனியைப் போல மிகச் சிறந்த கேப்டன் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி ரிவ்யூவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக முக்கியமான தருணங்களில் சிறப்பான முடிவுகளை ரோஹித் சர்மா எடுத்துள்ளார். மகேந்திர சிங் தோனியைப் போன்று ரோஹித் சர்மாவும் மிகச் சிறந்த கேப்டன். இவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன் எனக் கேட்டால், முடிவுகள் எடுப்பதை பொறுத்தவரையில் இருவரும் சிறந்த கேப்டன்கள்தான் எனக் கூறுவேன். ஆனால், மகேந்திர சிங் தோனியைக் காட்டிலும் மிகச் சிறந்தவர் ரோஹித் சர்மா என என்னால் கூற முடியாது. மகேந்திர சிங் தோனி என்ன செய்துள்ளார் என்பது நமக்குத் தெரியும். அவர் பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

அண்மையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, டி20 போட்டிகளில் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்.

Story image

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 62 சர்வதேச டி20 போட்டிகளில் போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி 72 போட்டிகளில் விளையாடி 41 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.