காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்! வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

Rohit Sharma

ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ

Published On :

ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குவாஹாட்டியில் நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் 101 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களுக்கும் அதிகமாக குவித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

இதுவரை இந்திய அணிக்காக 290 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 12028 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 35 சதங்கள் மற்றும் மூன்று இரட்டைச் சதங்கள் அடங்கும்.

Summary

Former Indian captain Rohit Sharma has achieved the milestone of crossing 12,000 runs in One Day Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.