
டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஓய்விலிருந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்தது நன்றாக இருந்தது. உலகக் கோப்பையை வென்ற பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவது, நல்ல உணர்வைத் தருகிறது. தில்லி மற்றும் மும்பையில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அதிலிருந்து நாங்கள் நகர்ந்து செல்ல வேண்டும். தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் நடந்ததும் அதுவே. அந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமளித்தது. இருப்பினும், அதிலிருந்து நகர்ந்து டி20 உலகக் கோப்பைக்குத் தயாரானோம். தற்போது டி20 உலகக் கோப்பை நிறைவடைந்துவிட்டது. அடுத்த விஷயத்தை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். மிகப் பெரிய தொடர் வரவிருக்கிறது என்றார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 2) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.