எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

27 ஆண்டுகளுக்கு பிறகு.. இலங்கையிடம் தொடரை இழந்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியை வெல்லும் முனைப்பில் இலங்கை.

News image
இந்திய அணியின் பயிற்சியாளர், கேப்டன்- Kunal Patil
Updated On :5 ஆகஸ்ட் 2024, 8:56 am

DIN

இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது.

இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி டிரா செய்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விளையாடிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன்மூலம், இலங்கை அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், 1-1 என்ற புள்ளியுடன் தொடர் சமனில் தான் முடியும். இந்திய அணியால் கைப்பற்ற முடியாது.

கடந்த 27 ஆண்டுகளாக இலங்கை - இந்திய அணிகள் மோதிய 12 ஒருநாள் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றி இருந்தது.

1997ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இலங்கை பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

அதே ஆண்டில், இந்தியாவுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

அதன்பிறகு 2005 முதல் 2023 வரை இரு அணிகளும் விளையாடிய 12 தொடர்களையும் இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியது.

தற்போது, மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெல்லும் பட்சத்தில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.