ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆடவர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. இந்த தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா தவரிசையில் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி ஒரு இடம் சறுக்கி 4-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இந்தியாவின் ஷுப்மன் கில் இருவரும் உள்ளனர்.

குல்தீப் யாதவ் - படம் | AP
பந்துவீச்சை பொறுத்தவரையில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா முறையே 5 மற்றும் 8-வது இடங்களில் உள்ளனர். முதல் மூன்று இடங்களில் தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மகாராஜ், ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











