கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

தோல்வியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த அல்கராஸ்! வைரல் விடியோ!

கார்லோஸ் அல்கராஸ் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் டென்னிஸ் ராக்கெட்டை (பந்தாட்ட மட்டை) உடைத்தது பேசுபொருளாகியுள்ளது.

தோல்வியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த அல்கராஸ். - படங்கள்: எக்ஸ் / டென்னிஸ் டிவி

Published On :

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் விம்பிள்டன் சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ் அடுத்த 2 செட்டுகளிலும் தோல்வியுற்றார்.

பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் இந்தப் போட்டியில் 4-6, 7-6 (5), 6-4 என்ற செட்களில் அல்கராஸை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றார். பின்னர் அதில் தோற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார்.

இந்தப் போட்டியில் தோல்வியுற்ற அல்கராஸ் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் டென்னிஸ் ராக்கெட்டை (பந்தாட்ட மட்டை) மைதானத்திலேயே பல முறை ஓங்கி அடித்து உடைத்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் இது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. விம்பிள்டனில் வென்ற அல்கராஸ் ஒலிம்பிக்கில் ஜோகோவிச்சிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.